கடல்நடுவே புயல்இடையே கப்பல் போல
காப்பாளர் இறக்கின்ற போது உற்றார்
அடைகின்ற இடர்அச்சம் தீர்க்க வேண்டும்,
அரவணைத்துப் பொருள் வழங்கித் தேற்ற வேண்டும்.
உடன் உதவக் குடும்பநலத் திட்டம் கண்டோம்
வளர்ந்து வரும் திட்டமதின் நன்மை காண்பீர்!
திடம் மனதில் ஊட்டிடும் இத்திட்டம் ஓங்கிப்
பெருகிடவே, பயன்கூட சேர்வீர் இன்றே!
-- பனசை மு. சுவாமிநாதன்
தொண்டை மண்டல முதலியார் குடும்ப நலத் திட்டம், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட சங்கத்தின் 11 ஆம் ஆண்டு நிறைவு விழா மன்னார்குடியில் நடைபெற்றபோது திட்டத்தின் பிதாமகன் கும்பகோணம் தொ.ம.மு.சங்கத்தின் தலைவர் திரு s.தியாகராஜன் முன்னிலையில், முன்னால் மாவட்ட தலைவர் திரு s.முருகேச முதலியார் அவர்கள் துவக்கி வைக்க, மன்னார்குடி தொ.ம.மு.சங்கத்தலைவர் திரு Dr.C.அசோக்குமார், தன்னை முதல் உறுப்பினராக சேர்த்திட தொடங்கி வைக்கப்பட்டது.
1. மறைந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக பொருளாதார ரீதியாக உதவுவதே இதன் அடிப்படை நோக்கம்.
2.முதலியார்களால்,முதலியார்களுக்காக,இறந்த முதலியார் குடும்பங்களுக்காக, அவர்தம் வாரிசுகளுக்காக உதவுவதே திட்டத்தின் குறிக்கோள்.
1.உறுப்பினர் தொண்ட மண்டல முதலியாராக இருக்க வேண்டும். கலப்பு திருமணமாக இருந்தால் யாராவது ஒரு உறுப்பினராவது தொண்டை மண்டல முதலியாராக இருக்க வேண்டும்.
2.எந்த சங்கம் என்ற பாகுபாடு கிடையாது.
3.கிளை சங்கங்களில் உறுப்பினராக உள்ளோர் சேர தகுதி உடையவர்.
4. 60 வயதுக்கு மேல் ஆதார் கார்ட் அவசியம்.
5.மருத்துவ சான்றிதழ் தேவை இல்லை.
6.குடும்பத்தினர் தனி தனியாக சேர தகுதி.
1. கிளைச்சங்கங்களின் நிர்வாகிகள் வழியாக விண்ணப்ப படிவத்தை வாங்கியோ நேரடியாக பதிவு அலுவலகத்தை அணுகி விண்ணப்ப படிவத்தை பெற்றோ,விண்ணப்பத்தை அவரவர் சுயவிபரத்துடன் பூர்த்தி செய்து,பாஸ்போர்ட் புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டி,ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஒன்று இணைத்து அனுப்பிட வேண்டும்.
2. வங்கியில் ரொக்கமாகவோ,காசோலை வடிவிலோ ( வயதிற்க்கு தகுந்தார்போல்) கட்டணங்களை கட்டி அடையாள அட்டை/ ரசீது பதிவிட)ப்படால் உறுப்பினராக சேரும் தகுதி பெறுவ்ர்.
3. விண்ணப்பம் முழுமையாக பூர்த்திசெய்யப்பட வேண்டும்.நுழைவு கட்டணம் மற்றும் 5 உறுப்பினர்களின் மறைவுக்கான முன்பணம் ( Advance Fraternity Contribution Amount ) ஆகியவை கட்டியிருக்க வேண்டும்.
4. விண்ணப்ப படிவம் அடித்தல் திருத்தல் இன்றி பூர்த்தி செய்யப்பட்டு உறுப்பினரின் முழு கையெழுத்துடன் சான்று அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
5. சங்கம் இல்லாத ஊரில் வாழும் ஒருவர் உறுப்பினராக சேர விரும்பினால், ஏதாவது ஒரு சங்க ஆயுள் உறுப்பினரின் பரிந்துரையின் பேரில் அவர் உறுப்பினராகலாம். அப்படிப்பட்டவருக்கு மறைவுக்கு பிறகு வழங்கப்படும் ஈட்டுத்தொகை பரிந்துரை செய்த உறுப்பினர் சார்ந்த சங்கத்தின் மூலம் வழங்கப்படும்.
1.தற்போது உள்ள விதிகளின்படி உறுப்பினர் மறைவு குறித்து கேட்புக்கடிதம் வந்தவுடன் அதில் குறிப்பிட்டிருக்கும் தொகை செலுத்த வேண்டும்.
2.உறுப்பினர் மறைவு குறித்த செய்தி உறுப்பினர்களுக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
உயிரோட்டத்துடன் இருக்கும் பங்குத்தொகை செலுத்தும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்த உறுப்பினர் செலுத்திய மொத்த பங்குத்தொகையின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயன் தொகை தீர்மானிக்கப்படும்..
1.Original ID Card.
2.உறுப்பினர் இறந்த செய்திக்கடிதம் கிளைச் சங்க நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட வேண்டும்.
3. முதல் வாரிசாக குறிப்பிடபட்டிருக்கும் நபரின் பயன்தொகை கேட்கும் விண்ணப்பம் கிளைச்சங்க நிர்வாகிகளால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
4.மேற்கூறிய அனைத்தும் கிளைச்சங்கம் வழியாகமட்டுமே பதிவு அலுவலகத்திற்கு அனுப்பப்படவேண்டும்.
நுழைவு கட்டணம் மற்றும் 5 உறுப்பினர்களின் இறப்பிற்கான முன்பணம்
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
40 வயது உட்பட்டவர்களுக்கு: ரூ 500+500= ரூ 1000/
41முதல் 60 வயது வரை : ரூ 1000+500= ரூ 1500/
61-70 வயது வரை : ரூ 1500+500= ரூ 2000/
71-80 வயது வரை ரூ: 2500 + 500= ரூ 3000/
கால வரையறை
உறுப்பினராக சேர்ந்து மூன்று மாதம் வரை எந்த உறுப்பினரின் மறைவுக்கும் முழுபயன் தொகை வழங்கப்படாது.உறுப்பினர் 3 மாதத்திற்குள் இறக்க நேரிட்டாலும்,விபத்தில் அடிபட்டு இறந்தாலும் திட்ட பயன் தொகையில் பாதி வழங்கப்படும்.( அதாவது ஒரு உறுப்பினருக்கு ரூ 50 வீதம் மொத்த உறுப்பினர்கள் .)
2. உறுப்பினரின் தற்கொலை இறப்பிற்கு எந்த பயன் தொகையும் வழங்கப்படாது.
உறுப்பினராக சேர்ந்தவுடன் முகவரி மற்றும் வாரிசு விபரம் குறிப்பிட்டு ID Card வழங்கப்படும்.
உறுப்பினர் முகவரி மாற்றம் பதிவு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். வாரிசு மாற்றம் இருப்பின் ஒரு தடவை மட்டும் அனுமதிக்கப்பட்டு கிளை சங்க செயலர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும். Id Card திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் அனுப்பப்படும்.
1.விண்ணப்பத்தில் தவறான தகவல்
2.உறுப்பினர்களின் மறைவுக்கான பணம் செலுத்த தவறுவது மற்றும் தொலைபேசி தகவல்களை அலட்சியம் செய்வது. Reminder தபால்களை பொருட்படுத்தாமல் இருப்பது. 5 உறுப்பினர்களின் மறைவுக்கான பங்கு தொகை ரூ 500/ உரிய காலம் கடந்தும் கட்ட தவறினால்,Reg.Post With AD மூலம் தகவல் அனுப்பி, உறுப்பினராக நீடிக்கும் தகுதியை இழக்கும் நிலை வரும்.
3.உறுப்பினர் தாமாக வெளியேற விரும்பினால் நுழைவுக்கட்டணம் திரும்ப அளிக்கபடமாட்டாது.முன்பணம் பங்கு தொகை மீத இருந்தால் கொடுக்கப்படும்.
4.உறுப்பினராக நீடிக்கும் தகுதி இழப்பின்,மீண்டும் உறுப்பினராக சேரத்தகுதி இல்லை.
5.ஓர் உறுப்பினர் இரு தடவை சேரும் போது ( பல்வேறு தேதிகளில்) கடைசி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உறுப்பினர்,உறுப்பினர் நுழைவு கட்டணம் மற்றும் 5 உறுப்பினர்களின் மறைவுக்கான முன்பணம் ஆகியவற்றை இழக்க நேரிடும்.
31.3 வரை முடியும் அந்தந்த நிதியாண்டிற்கான கணக்குகளைத் தணிக்கை செய்ய தணிக்கையாளரை நியமித்து தணிக்கை செய்து ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும்.
1.தலைவர்
திட்டத்தை மேம்படுத்த செயற்குழுவை கூட்டுதல்/பொதுக்குழுவை கூட்டுதல்-ஆலோசனை கேட்டறிதல்
2.தீர்மானம் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் வாக்களிப்பிற்கு விடும் போது வாக்கு சரிவிகிதமாக வரும் நிலை ஏற்படின் தன்னுடைய வாக்கை செலுத்தலாம்.
-( குடும்ப நலத்திட்ட விளக்க கையேடிலிருந்து எடுக்கப்பட்டவை)