நலநிதி கலந்துரையாடல் கூட்டம் - Feb 2026
நலநிதி கலந்துரையாடல் கூட்டம் - Feb 2026
கடந்த 15/2/2026 அன்று கும்பகோணம் CP வித்யா மந்திர் பள்ளியில் நலநிதியின் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நமது சமூக கிளை சங்கங்களின் நலநிதி நிர்வாகிகள் பெருவாரியாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தலைவர் திரு Dr.S.தியாகராஜன், செயலர் திரு T.சம்பத், பொருளர் திரு V.ஹரிஹரன் ஆகியோரின் உரை, கலந்து கொண்ட நிர்வாகிகளின் கருத்து பரிமாற்றம், இணையதள விளக்கம், நலநிதி தீர்மானங்கள், புதிய முறையில் பணம் செலுத்துவதற்கான விளக்கம், நன்றியுரை, நாட்டுப்பண் இவற்றுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.
சென்னையில் இருந்து திரு. DSP சுப்பையா அவர்களும், காஞ்சி திரு. வரதன் அவர்களும் வெகு தொலைவில் இருந்து வந்திருந்து கூட்டத்திற்கு சிறப்பு சேர்த்தனர்.
சிறப்பான விருந்தோம்பலுடன் கூட்டம் இனிதாய் நிறைவுற்றது