கடந்த 28/12/2025 ஞாயிறு அன்று கும்பகோண சங்க 42 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. அன்று மாநில தொண்டை மண்டல முதலியார் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.
இது சமயம் தொண்டை மண்டல முதலியார் நலநிதிக்கான புதிய இணைய தளம் ஒன்று வெளி இடப்பட்டது.
நலநிதியின் தலைவர் டாக்டர் திரு S. தியாகராஜன் அவர்கள் இணையதள முகவரி மற்றும் விழா குறிப்பு அடங்கிய நினைவு பட்டயம் ஒன்றை, நலநிதியின் செயலர் திரு T. சம்பத் வழங்க அதை பெற்றுக்கொண்டு இணையதள முகவரியான https://www.nalanidhi.in/ என்பதை படித்துக்காட்டி வெளியீட்டு விழாவை செய்தார்கள். இந்த இணையதளத்தின் விபரக்கோப்பினை துணை செயலர் திரு S.சீனிவாசன் அவர்கள் டாக்டருக்கு வழங்கினார்கள்
இந்த இணையதளத்தை வடிவமைத்து இயக்கும் திருவாரூர் சங்க திரு S. கார்த்திகேயன் அவர்கள் இந்த இணைய தளத்தின் அவசியம் மற்றும் அதில் உள்ள கூறுகள் வசதிகள் எதிர்காலத்தில் செய்யப்படப்போகும் விரிவாக்கங்கள் இவற்றை பற்றி பேசினார். பிரதிபலன் பாராமல் சமூக சேவையாய் நலநிதியை நடத்தி வரும் நிர்வாகிகள் அனைவருமே கர்மயோகிகள் என்றும் விவரித்தார்.
மாநில செயலர் திரு R. சுகுமாரன் அவர்கள் இவ்விழாவிற்க்கு தலைமை தாங்கினார்கள். வெளியீட்டு விழாவை நலநிதியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு V. ஹரிஹரன் அவர்கள் சிறப்பாக நடத்தினார்கள்.
Momento Shield Of The Website